மீன்வளப் பல்கலையில் உதவிப் பேராசிரியர் பணி அறிவிப்பு. - Asiriyar.Net

Thursday, December 24, 2020

மீன்வளப் பல்கலையில் உதவிப் பேராசிரியர் பணி அறிவிப்பு.

 


நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . 


பணி : Assistant Professor : 23 இடங்கள் . 



காலியிடங்கள் உள்ள துறைகள் விவரம் : Aquaculture 7 , Fish Processing Technology - 2 , Fishing Technology and Fisheries Engineering- 3 , Aquatic Environment Management - 3 , Fisheries Biology and Resource Management - 3 , FishPathologyandHealthManagement - 3 , Fisheries Extension - 1 , Fisheries Economics - 1 . தகுதி : B.F.Sc பட்டப்படிப்பை முடித்து சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் குறைந்தது 55 % மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் . மேலும் ஸ்லெட் நெட் தேர்வில் தேர்ச்சி . NASS பத்திரிகையில் ஒரு ஆய்வுக் கட்டுரையாவது வெளியாகியிருக்க வேண்டும் . 


விண்ணப்பக் கட்டணம் : 12 ஆயிரம் ( எஸ்சி / எஸ்டியினருக்கு ₹ 1000 ) . இதை ' The Finance Officer , Tamilnadu Dr.J.Jayalalitha Fisheries University ' என்ற பெயரில் நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும் . www.tnjfu.ac.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து , விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் . விண்ணப்பத்தை ' The Registrar , Tamilnadu Dr.J.Jayalalitha Fisheries University , Nagapattinam - 611002 . ' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் . விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : 5.1.2020 .





No comments:

Post a Comment

Post Top Ad