குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள் - Asiriyar.Net

Thursday, December 24, 2020

குருப் பெயர்ச்சி 2020 - 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள்

 


12 ராசிக்காரர்களுக்கான 2020-ஆம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து நமக்கு வழங்கியுள்ளார். படித்து பலனடையுங்கள். 






மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)


நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடைய மேஷ ராசி அன்பர்களே 


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது தொழில் கர்ம ஜீவன ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய தன வாக்கு குடும்ப ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய சுக ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் - கேது பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.


உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.


குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.


செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.


உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.



வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.


அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள்.


கலைத்துறையினரைத் தேடிப் புதிய  ஒப்பந்தங்கள் வரும்.ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.


பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.


மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.


அஸ்வினி:

இந்த குருப் பெயர்ச்சியில் காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத்  தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். 


பரணி:

இந்த குருப் பெயர்ச்சியில் புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே  அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போகவும். 


கார்த்திகை:

இந்த குருப் பெயர்ச்சியில் உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய  நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். 


பரிகாரம்:


செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள்.  ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள்.


உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டமாக இருக்கும். எந்த காரியத்தையும் சூரியன் - செவ்வாய் - குரு ஆகிய ஹோரைகளில் ஆரம்பித்தால் வெற்றி தேடி வரும்.


*****

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)


தெளிவான பேச்சும் நிறைந்த செயல்திறனும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது பாக்கிய ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய ராசி - ஏழாம் பார்வை உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.



மற்ற கிரகங்களின் கிரகநிலை:

சனி பகவான் அஷ்டம ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். ராகு பகவான் ராசியிலும் - கேது பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் தேவையான உதவிகளைச் செய்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள்.


குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அதை உங்களின் முன்கோப பேச்சுகளால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும். அரசு வகையில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். மற்றபடி குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். குறிக்கோளை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களைப் பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எதிர்பாராத பல நன்மைகள் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும்.


உங்கள் நிர்வாகத் திறமை கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். உங்கள் ஆத்மசக்தியால் மனதைக் கட்டுப்படுத்தும் மறைமுகக் கலைகளில் தேர்ச்சிப் பெறுவீர்கள். நஷ்டம் வரும் என்று நினைக்கும் விஷயங்களில் ஈடுபட மாட்டீர்கள். நண்பர்களின் பொறாமைகளுக்கும் அலட்சியங்களுக்கும் ஆளாக வாய்ப்பு இருப்பதால் அவர்களிடம் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். பொருளாதார நிலை உயரும்.


வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செயல்களில் அலட்சியங்கள் இருந்தாலும் திட்டமிட்டு பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். உடலாரோக்கியமும் சிறப்பாக இருக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். அலுவலக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். கடமைகளில் கண்ணுங்கருத்துமாக இருப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும். 


வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை. 



அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பர். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு வரும். கட்சியில் புதிய பணிகளைச் சாதுர்யமாகச் செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவும். 


கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தாமாகவே கிடைக்கும். ஆனாலும் ஒப்பந்தங்களை முடித்து நற்பெயரை எடுப்பர். ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் பேராதரவைப் பெறுவர். செயல்களைச் சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும். செயல்களில் முழுத்திறமையையும் பயன்படுத்துங்கள். 


பெண்மணிகளை குடும்பத்தினர் மதிப்புடனும் கௌரவத்துடனும் நடத்துவர். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ற சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் காணப்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம். 


மாணவமணிகள் முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.


கார்த்திகை:

இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில்  எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். 


ரோகினி:

இந்த குருப் பெயர்ச்சியில் சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும்.  தொழில் நிமித்தமாக நீண்ட  தூரம் பயணம் போக வேண்டி வரும். 


மிருகசீரிஷம்:

இந்த குருப் பெயர்ச்சியில் எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய  முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. 


பரிகாரம்:


வெள்ளிக்கிழமைதோறூம் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும்.  “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.



கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளை பயன் தருவதாக இருக்கும்.


*****

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


நடத்தையும் தெளிவும் சிந்தனையில் நிதானமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது அஷ்டம ஆயுள் ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய விரைய ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய தன வாக்கு குடும்ப ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் சப்தம களத்திர ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று அஷ்டம ஆயுள்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


ராகு பகவான் அயன சயன போக விரைய ஸ்தானத்திலும் - கேது பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில் இருந்தவர்களுக்கு திடீரென்று அனுகூலமான விடுதலை கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அனாதைகளுக்கும் நலிந்தோருக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவளிப்பீர்கள்.


சமுதாயத்தில் உயர்தோருடன் அறிமுகமாவீர்கள். உங்களின் காரியங்கள் இடையூறின்றி நிறைவேறும். எதிர்பார்த்த எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசமும் செய்வார்கள். பெற்றோர் வழியிலிருந்து நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் சுமுகமான பாகப்பிரிவுகளும் உண்டாகும். குடும்பப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவீர்கள்.


உங்கள் நன்னடத்தையால் அனைவரையும் கவருவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உதவி என்று வருபவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.  நண்பர்களுக்குள் இருக்கும் சண்டைச் சச்சரவுகளைத் தீர்த்து வைப்பீர்கள். மற்றபடி உழைப்பிற்கு ஏற்ற வருமானம் உடனுக்குடன் கிடைக்கும்.



உங்கள் உலக அறிவு அனுபவம் பலருக்கும் பயன்படும். தீயோர்களை மன்னிப்பீர்கள். மேலும் அவர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள். பணவரவு சிறிது குறைவாக இருந்தாலும் குடும்பத் தேவைகளுக்காக செலவு செய்ய தயங்கமாட்டீர்கள். மேலும் கடன் தொல்லைகள் ஏற்படாது. உடன்பிறந்தோர் உங்களால் பயன் அடைவார்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். புத்திசாலித்தனத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். துணிந்து செய்யும் காரியங்கள் அனைத்தும் லாபகரமாகவே முடிவடையும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிப்பர். மேலதிகாரிகளின் மனமறிந்து செயலாற்றுவர். வருமானத்திற்கு எந்த குறையும் வராது. பயணங்களால் நன்மை கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள். 


வியாபாரிகள் புதிய யுக்திகள் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முனைவர். போட்டி பொறாமைகள் சற்று தலை தூக்கும். பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். அரசாங்கத்திலிருந்தும் சலுகைகள் கிடைக்கும். 


அரசியல்வாதிகளுக்கு முக்கியமானவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். கட்சிப் பணிகளில் சுறுசறுப்புடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் ஏற்பீர்கள். நண்பர்களாலும் தொண்டர்களாலும் ஏற்றம் பெறுவீர்கள். 


கலைத்துறையினருக்கு புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சக கலைஞர்களே உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர்.மேலும் பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். 


பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம், தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு இருக்கும். குழந்தைகளால் சந்தோஷங்கள் நிறையும். 


மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.


மிருகசீரிஷம்:



இந்த குருப் பெயர்ச்சியில் நீண்ட முயற்சிகளின் பேரில்  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். 


திருவாதிரை:


இந்த குருப் பெயர்ச்சியில் பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது.  வேலையில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக்  கொடுத்து போக வேண்டியிருக்கும். 


புனர்பூசம்:


இந்த குருப் பெயர்ச்சியில் உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். 


பரிகாரம்:


புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்.


கிழக்கு வடக்கு ஆகிய திசைகள் அதிர்ஷ்டம் தரும். சந்திரன் - புதன் - குரு ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.


*****


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு ரண ருண ரோக ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது சப்தம களத்திர ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய ராசி - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் ரண ருண ரோக ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று சப்தம களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.



ராகு பகவான் லாப ஸ்தானத்திலும் - கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் உங்கள் எண்ணங்களில் தெளிவும் செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஷயங்களை மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். நினைத்தது கைகூடும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள் உங்களை நாடி நட்பு கொள்வார்கள். சமூகத்தில் அதிகமான செல்வாக்கு உண்டாகும். எதிரிகளுக்கும் உதவி செய்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 


வெளியூர் வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வந்து சேரும். அதேநேரம் புறம் பேசுபவர்களின் உறவைத் தவிர்த்து விடவும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் போகங்களும் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவர். குடும்பத்தில் திருமணம் புத்திரபிராப்தி ஆகியவைகளும் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகத் தொடரும்.


தர்ம சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிக ஆலய விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். பொது ஜனத்தொடர்பு பலப்படும். தவறு செய்யும் நண்பர்களை நேரடியாகக் கண்டிப்பீர்கள். குடும்பத்தில் சுகம் நிறையும். உடன்பிறந்தோரின் நேசத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாக்குக்கு நன்மதிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்கையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். 


நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திருட்டுப்போன பொருளும் திரும்பக் கிடைக்கும். உங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்தவர்கள் மனம் மாறி நன்மை செய்வார்கள். சிலருக்கு வீடு மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். மேலும் குழந்தைகளுக்குச் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். அதோடு வழக்குகளும் தாமதமாகும். கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் காரியமாற்ற வேண்டிய காலக்கட்டமிது.



உத்தியோகஸ்தர்கள் சற்று கூடுதலாக உழைக்க நேரிடும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திப்பீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறுவதில் தாமதங்கள் உண்டாகலாம். எண்ணங்கள் பூர்த்தியாகும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களைத் தள்ளிப் போடவும். 


வியாபாரிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு உதவுவர். தொடரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 


அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். அதேசமயம் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 


கலைத்துறையினருக்கு புதிய நட்புகளால் சந்தோஷம் கிடைக்கும். வேலையில் மட்டுமே குறியாக இருக்கவும். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறைவாக இருக்காது. நிதானமாகவும், பொறுமையுடனும் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.


பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.


மாணவமணிகள், கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். பெற்றோர்கள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். ஞாபகசக்தி வளர விடியற்காலையில் பயிற்சிகளை மேற்கொள்ளவும்.


புனர்பூசம்:

இந்த குருப் பெயர்ச்சியில் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. 


பூசம்:

இந்த குருப் பெயர்ச்சியில் உங்களுடைய உடல்நலத்தை  பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம்  இருக்கும். 


ஆயில்யம்:

இந்த குருப் பெயர்ச்சியில் எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில்  தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். 



பரிகாரம்:


முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். “அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும். மேற்கு, வடக்கு திசைகள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சந்திரன் - குரு ஹோரைகள் நன்மையைத் தரும்.


*****

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)


அதிகார தோரணையும் நேர்மையும் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது ரண ருண ரோக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய தொழில்  ஸ்தானம் - ஏழாம் பார்வை உங்களுடைய விரைய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ராகு பகவான் தொழில் ஸ்தானத்திலும் - கேது பகவான் சுக ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எனினும் சிக்கனமாக இருந்து சேமிப்புகளையும் பெருக்குவீர்கள். உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நன்றாக யோசித்து செயலாற்றுவீர்கள்.


சமுதாயத்தில் தலைவன் என்று பெயரெடுப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். சுயதேவைகளைக் குறைத்துக்கொண்டு உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்கள் கெட்டிக்காரத்தனம் கூடும். செல்வாக்கு, அந்தஸ்து இரண்டும் உயரும். இறைவழிபாட்டில் கவனத்தை அதிகப்படுத்துவீர்கள். ஏழைகளுக்குத் தானதர்மம் செய்வீர்கள். நெடுநாளாக கருத்தரிக்காமல் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் கருத்தரிப்பார்கள்.


நெடுநாட்களாக நீடித்து பாதித்து வந்த நோய்கள் முழுமையாக குணமடைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய ஆலய நிர்மாண வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். தேவைக்குமேல் பணம் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். பொழுதுபோக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்கள் பகுத்தறியும் திறன் கூடும். மனஉணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்கள் புதுமைகளாக மலரும். புதிய படைப்புகளை வாங்குவீர்கள். குடத்தில் இட்ட விளக்காக காரியமாற்றி வந்தவர்கள் குன்றின்மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். நேர்மையான செயல்களால் வீட்டிலும் வெளியிலும் நீதியைக் காப்பாற்றுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிட்டு நற்பெயர் எடுப்பர். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பர். சிலநேரங்களில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணவரவுக்கு தடைகள் வராது. ஊதிய உயர்வினைப் பெறுவர். மேலதிகாரிகள் முழுமையான ஆதரவைத் தரும் ஆண்டாக இது அமைகிறது. 


வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பர். விற்பனைப் பிரதிநிதிகளை நியமிப்பர். இதனால் எதிர்பார்க்கும் அதிக லாபத்தைப் பெறுவர். கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும். வங்கிகளிடமிருந்து கடன்கள் பெறுவர். கூட்டாளிகளின் ஆதரவும் கிடைக்கும். 


அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வர். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். 


கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவர். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர். புதிய நண்பர்களால் பலனுண்டு. புதிய படைப்புகளை உருவாக்குவர். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்பு உயரும். 



பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டு. வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பர். மேலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. 


மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் பாராட்டும் பெற்று மகிழ்வர். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சிகள் எடுத்து படிக்கவும். விளையாட்டினால் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வர்.


மகம்:

இந்த குருப் பெயர்ச்சியில் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில்  சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். 


பூரம்:

இந்த குருப் பெயர்ச்சியில் புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள்  அன்னியோன்னியமாக இருப்பர். 


உத்திரம்:

இந்த குருப் பெயர்ச்சியில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க  வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.  


பரிகாரம்:


ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


மேலும் கோமாதாவிற்கு அமவாசை தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும். கிழக்கு, வடக்கு திசைகள் அதிர்ஷ்டம் தரும். சூரியன் - புதன் - குரு ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் தங்கு தடையில்லாமல் காரியங்கள் நடந்து முடியும்.


*****


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


உழைப்பின் மூலம் உன்னதமான இடத்தைப் பெறும் கன்னி ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய ராசியையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் சுக ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று பஞ்சம பூர்வ புண்ணிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் - கேது பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களும் வசூலாகும்.


உடலாரோக்கியம் நன்றாக இருந்தாலும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து வரவும். சமூகத்தில் மதிப்பு, கௌரவம் இரண்டும் உயரத்தொடங்கும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களை வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் பெறுவீர்கள். வெளிப்படையாகப் பேசுவதையும் தவிர்க்கவும். பெற்றோருக்குச் சிறிது மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம்.



அரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள். உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகளும் கிட்டும். சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்ப்புகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவுடன் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.சிலர் வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும் பெறுவர். 


வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய பொருள்களை விற்பனை செய்து மேலும் லாபத்தை அள்ளுவீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமிப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். மேலும் போட்டியாளர்களின் மனமறிந்து சந்தையில் விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்ய நேரிடும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். 


அரசியல்வாதிகள் பெரிய சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் ரகசியத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளின் பலம் குறையும். சிலருக்கு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்து விடுவிக்கப்படுவர். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி அவர்களின் ஆதரவையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். 


கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தையும் பெறுவர். சக கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள். 


பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவர். மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவதோடு, கடமைகளில் சலிப்பு உண்டானாலும் மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவர். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவர். 


மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடல்பலத்தைக் கூட்டிக்கொள்வதுடன் வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரமும் போடுவீர்கள்.


உத்திரம்:


இந்த குருப் பெயர்ச்சியில் மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். 


ஹஸ்தம்:

இந்த குருப் பெயர்ச்சியில் புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். 


சித்திரை:

இந்த குருப் பெயர்ச்சியில் புதிய  ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால்  பிரச்சனைகள் வரலாம். 


பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.


“துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலம் தரும். புதன் குரு ஹோரைகள் நன்மையைத் தரும்.


*****

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)


அனைவரையும் சரிசமமாக மதித்து நடத்தும் துலா ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய அயன சயன போக விரையஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் தைரிய வீர்ய ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


ராகு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திலும் - கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 


இந்த குருப் பெயர்ச்சியில் குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும். புதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் குடியிருக்கும் வீட்டைவிட்டு சற்று கூடுதல் வசதியான வீடுகளுக்கு மாறுவர். புதிய ஆடைஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தெளிந்த அறிவால் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துப் புகழப்படுவர். 


மேலும் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பர். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். அதனால் பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவர். அனாவசியச் செலவுகள் குறைந்து அவைகள் சுபச் செலவுகளாக முடியும். ஆன்மிகத்தில் பற்றுள்ளவர்கள் பெரியவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவர். தியானம், யோகா போன்றவற்றில் பற்று ஏற்பட்டு அதில் சாதனைகளைச் செய்வர்.



மனோபலம் சற்று குறையும். அனாவசிய விஷயங்களில் மனதைக் குழப்பிக் கொள்வர். சிறிய அளவில் பொருளிழப்பு ஏற்படும். சிலருக்கு விஷ சந்துக்களால் ஏற்படும் உபாதையால் மருத்துவச் செலவும் உண்டாகும். உங்களின் நுண்ணறிவு வெளிப்படும். மேலும் பேச்சுத் திறமைக்கும் மதிப்பு ஏற்படும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். செயல்களில் பொறுமையுடன் செயலாற்றி வெற்றியுடன் முடிப்பர். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் பெரிய லாபத்தை இதே காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பார்கள். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு, நடந்து கொள்வர். கொடுத்த பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் பொறுப்புடனும் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள். 


வியாபாரிகள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். காரியங்கள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கவும். பணவிஷயங்களில் எச்சரிக்கை தேவை. 


அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவர். மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவர். சம்பந்தமில்லாத விஷயங்களில் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டாம். 


கலைத்துறையினரின் புகழ் கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சியும் உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். நிதானப்போக்கினால் பெரிய முன்னேற்றத்திற்கு வழியை தேடித்தரும். புதிய வாய்ப்புகள் புகழுடன் வருமானத்தையும் கொண்டு வரும். ரசிகர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் இருக்காது. 


பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பார்கள். தெய்வ வழிபாட்டிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவர். புதிய சொத்து வாங்க ஆரம்பக்கட்ட வேலைகளைத் துவக்குவர். குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பார்கள். கணவருடன் ஒற்றுமையை காண்பதுடன் குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவர். 


மாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவர். மனதிற்குப்பிடித்த விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். மேலும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். புதிய நண்பர்களுடன் ஓரளவுக்குமேல் நட்பு கொள்ள வேண்டாம்.


சித்திரை:


இந்த குருப் பெயர்ச்சியில் சீரான பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.  எல்லாம் நல்லதே நடக்கும்.


ஸ்வாதி:


இந்த குருப் பெயர்ச்சியில் வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை தைரிய வீர்ய ஸ்தான ராசியில் விழுவதால் காரிய அனுகூலமும்  நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். 


விசாகம்:


இந்த குருப் பெயர்ச்சியில் மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக  நடந்து கொள்வர்.  


பரிகாரம் :


வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். தினமும் முன்னோர்களை வணங்கவும். வெள்ளிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். மேற்கு, தெற்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மைகளை அள்ளித் தரும்.


*****


விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)


எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய சப்தம களத்திர ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானமான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று தைரிய வீர்ய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ராகு பகவான் சப்தம களத்திர ஸ்தானத்திலும் - கேது பகவான் ராசியிலும் இருக்கிறார்கள்.



இந்த குருப் பெயர்ச்சியில் குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி காணப்படுவர்.


எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். எதிராக நின்ற போட்டியாளர்கள் படுதோல்வி அடைவர். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வார்கள். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தன்னம்பிக்கையே தாரகமந்திரம் என்கிற ரீதியில் பணிபுரிவீர்கள்.


திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகமும் குழந்தை வேண்டி எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும். உங்களுடன் பாராமுகமாக நடந்து கொண்டிருந்த நண்பர்களும் கூட்டாளிகளும் தற்போது நேசக்கரம் நீட்டுவர். உங்கள் சொல்கேட்டு நடந்துகொள்வதுடன் உங்களின் மதிப்பையும் உயர்த்திவிடுவர். சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களும் உங்களது கருத்தறிந்து நடந்து கொள்வார்கள்.


உடலாரோக்கியம் சிறக்கும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். சிறந்த பேச்சாளர் என்கிற நிலைக்கு உயர்வுண்டாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசிடமிருந்து ஆதாயங்களையும் சலுகைகளையும் பெறுவர். நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு விடுவர். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களின் தொடர்பு தானாகவே தேடிவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடல் சோர்வு, மனத்தெளிவின்மை அகலும். சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவர். திறமையை வளர்த்துக்கொள்வர். 


வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நன்மைகளைக் காண்பர். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பர். விற்பனை பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்றுவர். அதிக லாபம் தரும் பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். சிறிய அளவில் வியாபாரத்தை விரிவுபடுத்த முனைவர். 


அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் கட்சி பிரசாரங்களில் பங்கேற்பீர்கள். வழக்குகளும் முடிவுக்கு வரும். மேலும் அதிகாரம் மிக்க பதவிகளும் உங்களைத் தேடி வரும். வெற்றி தரும்படியான பயணங்களை மேற்கொள்வர். தொண்டர்களும் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர். 


கலைத்துறையினர் புதிய அங்கீகாரங்களைப் பெறுவர். புதிய வாய்ப்புகளும் வரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பொருளாதார வசதிகள் மேம்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். புகழ் வளரும். 


பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது. 


மாணவமணிகள் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்கள் பெறுவர். உடன்பிறந்தோரின் உதவிகளால் கல்வியில் முன்னேறுவர். பயிற்சியும் முயற்சியும் உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல முறையில் பழகுவீர்கள்.


விசாகம்:


இந்த குருப் பெயர்ச்சியில் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும்  ஆனந்தமும்  பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். 


அனுஷம்:


இந்த குருப் பெயர்ச்சியில் கணவன்-மனைவி இடையே அன்பும்  பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். 



கேட்டை:


இந்த குருப் பெயர்ச்சியில் உறவினர்கள்,  நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். 


பரிகாரம்:


செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.  கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். முன்னோர் வழிபாடு தினமும் செய்யவும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் நன்மை தரும். செவ்வாய் - குரு - சுக்கிரன் ஹோரைகள் அனுகூலமாக இருக்கும்.


*****

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)


தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப் போடும் திறன் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசியான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது தனவாக்கு குடும்ப ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் ராசியான தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - கேது பகவான் அயன சயன போக விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் உள்ளம், எண்ணம், சிந்தனை மேலோங்கும். மனதில் புதிய சிறப்பான விஷயங்கள் தோன்றும், உங்கள் விவேகம் கூடும். சில நேரங்களில் நீங்கள் தீர்க்கதரிசி என்று பாராட்டப்படும் வகையில் உங்கள் மதிநுட்பம் வெளிப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவுடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள்களாகத் தள்ளி வைத்திருந்த வெளிநாட்டுப் பயணமும் கைகூடும். உங்கள் காரியங்களைத் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவார்கள். 


பெற்றோர் வழியிலும் மருத்துவச் செலவுகள் என்று பெரிதாக எதுவும் ஏற்படாது. குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதர சகோதரிகளுக்கு நன்மைகளும் நலன்களும் உண்டாகும். அவர்களாலும் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும். பூர்வீகச் சொத்துகளிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். வருமானம் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே கிடைக்கும். இதனால் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். அசையும் அசையாச் சொத்துக்களையும் வாங்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.



பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் பெறுவீர்கள். உங்கள் சிறிய முயற்சிகள் உங்களுக்கு பலமடங்கு வெற்றியைத் தேடித்தரும். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்கள் நன்னடத்தைகளினால் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தர்மகாரியங்களிலும் ஆலய திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.


உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் செயல்திறன் கண்டு பாராட்டி மேலும் சில முக்கிய பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். சிலர் அலுவலகத்தில் முக்கிய பயணங்களைச் செய்து புதிய பயிற்சிகளைக் கற்று பயனடைவர். 


வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள். 


அரசியல்வாதிகள் தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும் மற்ற நெருங்கியவர்களுக்கும் மிகப்பெரிய உதவிகள் செய்து பாராட்டைப் பெறுவார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்கள் சிந்தனையில் தெளிவுடன் இருப்பதால் செயல்களில் வெளிப்படையாக ஈடுபடுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டையும் பெறுவீர்கள். 


கலைத்துறையினர் நல்ல முன்னேற்றங்களைக் காண்பர். புதிய ஒப்பந்தங்களை நல்ல முறையில் முடித்துக் கொடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியையும் பாராட்டையும் பெற வாய்ப்புகள் உண்டாகும். 


பெண்மணிகள் கடமை உணர்வுடன் விளங்கி குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்திச் செல்வர். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பதில் இருந்த தடைகள் விலகும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மன அமைதியைக் குறைக்கும். 


மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு சாதனைகள் படைப்பீர்கள். பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் உற்சாகம் கிடைக்கும்.


மூலம்:


இந்த குருப் பெயர்ச்சியில் உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 


பூராடம்:


இந்த குருப் பெயர்ச்சியில் வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட  வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். 


உத்திராடம்:


இந்த குருப் பெயர்ச்சியில் புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.  நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். 


பரிகாரம்:


வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். தினசரி காலை சிவபுராணம் படிக்கவும்.


வினாயகருக்கு வியாழக்கிழமைதோறும் அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் நன்மை தரும். செவ்வாய் - குரு ஆகிய ஹோரைகள் நன்மை தரும். 


*****

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம்,  திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும் மகர ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது உங்கள் ராசியான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய சப்தம களத்திர ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:



சனி பகவான் அயன சயன போக விரைய ஸ்தானமான  தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று ராசிக்கு மாறுகிறார்.


ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் - கேது பகவான் லாப ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த குருப் பெயர்ச்சியில் வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறைந்துவிடும். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பிராணிகளாலும் வருமானம் கிடைக்கும். வெளியில் கொடுத்த கடன்கள் தடையில்லாமல் குறித்த காலத்தில் திரும்பக் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். நெடுநாளாக மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து முழுமையாக விடுபடுவர். 


புதிதாக நண்பர்களானவர்களாலும் உதவிகள் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிரிகளிடமிருந்து விலகி நின்று செயல்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்துக்கொண்டிருந்த காரியங்கள் இப்பொழுது நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். கௌரவம், அந்தஸ்து உயருவதைக் காண்பீர்கள். கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமாக இருப்பதால் அனைவரிடமும் நடுநிலைமையுடன் பழகுங்கள். உங்களின் ஆலோசனைகள் அனைவராலும் மதிக்கப்படும்.


அதிகமான வருமானத்தைப் பெறுவீர்கள். கைநழுவிப்போன பதவிகள் உங்கள் கையைத் தேடிவரும். சமுதாயத்தில் உடன்பிறந்தோரால் பாராட்டப்படுவர். உற்றார் உறவினர்கள் மீது உங்களது பாசம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். கவலைகள் மறையும். சுகவீனங்களும் மறையும். தீய எண்ணங்கள் மனதில் புகாமல் இருக்கும். நண்பர்களையும் ஆதரிக்கும் மனப்பான்மை உண்டாகும். அன்னையுடன் நல்ல உறவு தொடரும். சரியான நேரத்தில் உணவெடுத்துக் கொள்வீர்கள். மற்றபடி அனைத்துச் செயல்களிலும் தெளிவான போக்கு தென்படும் காலகட்டமாக இது அமைகிறது.


உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் மறைந்து சுமுகமான சூழ்நிலை தென்படும். உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சக ஊழியர்களிடம் இணக்கமான உறவு மேம்படும். அவர்கள் உங்கள் வேலைச்சுமையை பகிர்ந்துகொள்வர். சிலருக்கு வீடுகட்ட கடன்களும் கிடைக்கும். 


வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். கடும்போட்டிகளையும் சந்திக்க நேரிடும். எனவே புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளும் சாதகமாக நடந்து கொள்வர்.


அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். எதிர்கட்சியினரிடமும் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். எதையும் முன்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வர். செல்வாக்கு உயரும். மற்றபடி கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். 


கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்து கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். மற்றபடி சக கலைஞர்கள் உதவக்கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கலைப்பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.


பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பணவரவும் சீராகவே இருந்துவரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும் சென்று வருவீர்கள். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். 


மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.


உத்திராடம்:


இந்த குருப் பெயர்ச்சியில் வேலை இல்லாமல்  இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில்  அதிக வருவாய் கிடைக்கும். 


திருவோணம்:


இந்த குருப் பெயர்ச்சியில் தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். 


அவிட்டம்:


இந்த குருப் பெயர்ச்சியில் பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.


பரிகாரம்: சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.


சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும். கிழக்கு, தெற்கு ஆகிய திசைகள் நன்மை தரும். சந்திரன் - செவ்வாய் - குரு ஹோரைகள் அதிர்ஷ்டமாக இருக்கும்.


*****

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால் எளிதாக முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய சுக ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:



சனி பகவான் லாப ஸ்தானமான  தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று அயன சயன போக விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் - கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 


இந்த குருப் பெயர்ச்சியில் நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும். வெளியூர் பயணங்களை அடிக்கடி செய்து செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். செய்கின்ற காரியங்களில் ஏற்படும் இடையூறுகளை சீரிய முயற்சிகளால் வெற்றியடையச் செய்வீர்கள். உறுதியுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். சார்ந்துள்ள துறையில் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அறிவுரையால் தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள்.


நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர். உறவினர்கள் அனைவரும் உங்களைப் புரிந்து கொள்வர். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கும் உயரத் தொடங்கும். தாய்வழி உறவுகளில் சிறப்புகள் உண்டாகும். மேலும் சிலருக்கு தாய்வழிச் சொத்துக்களும் கிடைக்கும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு. உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் மற்றவர்களுக்குப் பேரக்குழந்தை வாரிசும் உண்டாகும். எதையும் சமயமறிந்து பேசி வெற்றிபெறும் காலகட்டம் இது.


வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று அதிகரிக்கும். அதனால் சிக்கனத்தைக் கையாளவும். இதனால் புதிய ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் வேலை செய்யும் பக்குவம் உண்டாகும். உங்கள் பேச்சில் சிறிது தற்பெருமை தலை தூக்கும். பயணங்கள் செய்யும்போது புதிய இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும். வம்பு வழக்குகளில் விட்டுக் கொடுத்து சமாதானமாகவே போகப் பார்க்கவும். 


உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நன்கு உழைப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அனாவசிய விரோதம் எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.


வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள். இடையூறுகள் தோன்றினாலும் அவைகளைச் சமாளித்து வெளிவந்து விடுவீர்கள். காலதாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடைந்துவிடும். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முதலீடுகளைச் யோசித்துச் செய்யவும். 


அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகளும் வரும். தொண்டர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளில் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே முடியும். 


கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் வரும். 


பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். பிரச்னைகள் உண்டாகும்போது பொறுமையுடன் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். 


மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். மற்றபடி ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.


அவிட்டம்:


இந்த குருப் பெயர்ச்சியில் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். 


ஸதயம்:


இந்த குருப் பெயர்ச்சியில் உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.  


பூரட்டாதி:


இந்த குருப் பெயர்ச்சியில் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த பொருளை வாங்கலாம். 



பரிகாரம்:


சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.  தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.  


வினாயகருக்கு சனிக்கிழமைதோறும் அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். கிழக்கு, வடக்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சூரியன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை அளிப்பனவாக இருக்கும்.


*****

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் பயன்படுமாறு வாழும் மீன ராசி அன்பர்களே!


கிரகநிலை:


ஒரு வருட காலமாக உங்கள் ராசிக்கு தொழில் கர்ம ஜீவன ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய குருபகவான் தனது ஐந்தாம் பார்வையாக உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - ஒன்பதாம் பார்வையாக உங்களுடைய சப்தம களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.


மற்ற கிரகங்களின் கிரகநிலை:


சனி பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானமான  தனுசு ராசியில் இருக்கிறார். மார்கழி மாதம் 11ம் தேதி (26.12.2020) சனிக்கிழமை அன்று லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திலும் - கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள். 


இந்த குருப் பெயர்ச்சியில் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.


மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழிக்கு ஏற்ப நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களைக் கவருவீர்கள். குழந்தைகள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் காணாமல்போன பொருள்களும் திரும்பக் கிடைக்கும்.


உங்களின் ஆன்மிக உணர்வு மிகுதியாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பொதுக்காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாங்கிய கடன்களையும் தவணை தவறாமல் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியத்தைக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் இருந்த வெறுப்புகள் மறைந்து சிறப்பான பிடிப்புகள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.


உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அவை விலகி பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். 


வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே முடிவடையும். போட்டிகளால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பழைய எதிரிகளின் மீது ஒரு கண் இருக்கட்டும். பழைய கடன்கள் வசூலாகும். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். 


அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் புகழும் அந்தஸ்தும் உயரும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கட்சியில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். 


கலைத்துறையினருக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். 


பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். கணவருடன் அன்போடு பழகுவர். 


மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உடனுக்குடன் மனப்பாடம் செய்யவும். விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும்.


பூரட்டாதி:


இந்த குருப் பெயர்ச்சியில் நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். 


உத்திரட்டாதி:



இந்த குருப் பெயர்ச்சியில் புதிய வீடு  கட்டுவதற்கான வேலைகளை இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து  விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும். 


ரேவதி:


இந்த குருப் பெயர்ச்சியில் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள்.


பரிகாரம்:


வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.


வியாழக்கிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம். மேற்கு, வடக்கு ஆகிய திசைகள் அனுகூலமாக இருக்கும். சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் எதை ஆரம்பித்தாலும் வெற்றிதான்.

No comments:

Post a Comment

Post Top Ad