பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Wednesday, December 30, 2020

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு - அமைச்சர் செங்கோட்டையன்

 







பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமந்தூரில் 193 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.



பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக அரசு கல்விக்காக 34 ஆயிரம் கோடி செலவு செய்தும் ஏன் அதிக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கமல்ஹாசனின் கேள்வி எழுப்பியுள்ளதாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் 405 தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளதாக கூறினார்.

Post Top Ad