ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Asiriyar.Net

Wednesday, December 23, 2020

ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 






கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பள்ளி, கல்லுாரிகளில், இன்று முதல், ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில், கொரோனா வைரஸ் பிரச்னையால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி, 'டிவி' வழியாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.




இந்நிலையில், நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால்,கல்லுாரிகள் மற்றும் பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளுக்கு, நாளை முதல், 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும், 28ம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad