தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் - Asiriyar.Net

Thursday, December 17, 2020

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்

 






தங்கம் விலை இன்றுடன் தொடர்ச்சியாக 3 நாட்களில் பவுனுக்கு ரூ.672 அதிகரித்தது. பண்டிகை நாட்களில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


தங்கம் விலை கடந்த 3 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.42  அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,653க்கும், பவுனுக்கு ரூ.336 அதிகரித்து பவுன் ரூ.37,224க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது காணப்பட்டது.



கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,688க்கும், பவுனுக்கு  ரூ.280 அதிகரித்து ஒரு பவுன் ரூ.37,504க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது நாளாக இன்று காலையும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,695க்கும், பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு  பவுன் ரூ.37,560க்கும் விற்கப்பட்டது. 



தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.84, பவுனுக்கு ரூ.672 அளவுக்கு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று பண்டிகை  நாட்கள் மற்றும் விஷேச தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad