பொங்கல் பரிசுத் தொகை ரூ. 2,500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டிசம்பர் 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுபற்றிய சுற்றறிக்கையை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ளது.
டிசம்பர் 26 முதல் டிசம்பர் 30 வரை முற்பகலில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 13-ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment