ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சமையலர் பணி – Last Date to Apply 18.01.2021 - Asiriyar.Net

Saturday, December 26, 2020

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சமையலர் பணி – Last Date to Apply 18.01.2021

 






ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கான சமையலர் பணிக்கான காலிப்பணியிடங்களை அம்மாவட்ட  ஆட்சித்தலைவர்  வெளியிட்டுள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள்  அரியலூர் மாவட்டத்தில் குடியிருக்கும் எழுதப் படிக்க தெரிந்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், பழங்குடியினராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.




வாரியத்தின் பெயர்       -   ஆதிதிராவிடர் நலத்துறையின்

பணிகள்       -    சமையலர் (அரியலூர் மாவட்டம் )

மொத்த பணியிடங்கள்       -     17

விண்ணப்பிக்கும் முறை        -    நேரடி முறை / பதிவஞ்சல்

விண்ணப்பிக்க கடைசி தேதி        -   18.01.2021



சமையலர் பணிக்கான காலிப்பணி இடங்கள்:

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கான சமையலர் பணிக்கு மொத்தம் 17 காலிப்பணி இடங்களை  அரியலூர் மாவட்டத்தின்  கலெக்டர் அறிவித்துள்ளார்.


விடுதி சமையலர் பணிக்கான வயது வரம்பு:

ஆதிதிராவிடர் விடுதிக்கான சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  18 வயது முதல் 35 வயதிற்குள்  இருக்க வேண்டும். மேலும் முன்னனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.


சமையலர் பணிக்கு கல்வித்தகுதி:

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிக்கு சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதும். மேலும் அந்த துறையில் முன் அனுபவம் உள்ளவராகவும்   மற்றும் ஆதிதிராவிடராக  மற்றும் பழங்குடியினராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.  மேலும், அரியலூரில் குடி இருப்பவராக இருத்தல் வேண்டும்.




சமையலர் பணிக்கான மாத ஊதியம்:

அரசு பொறுப்பில் இருக்கும் விடுதிகளுக்கு அரசு நிர்ணயித்ததின் படி அந்த பணிக்கான மாத ஊதியம் வழங்கப்படும்.  இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.



விண்ணப்பக்கட்டணம்:

சமையலர் பணிக்கான விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.


சமையலறை தேர்வு செய்யும் முறை:

ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிக்கான சமையலர் பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விடுதிக்கான சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:


ஆதிதிராவிடர் நலத்துறையின் சமையலர்  பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 18.01.2021 ம் தேதிக்குள்  விண்ணப்பிக்கலாம்.


Click Here To Download -  Notification - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad