பள்ளிக் கல்வி - Fit India Movement - பதிவு செய்த பள்ளிகள் போக மீதம் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் Fit India Movement சார்பாக www.fitindia.gov.in எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்காண் இணையதளத்தில் சென்று மாநிலத்திலுள்ள அனைத்து வகைப்பள்ளிகளும் பதிவு ( Registration ) செய்து Fit India School Certificate ( சான்றிதழ் ) பெறவேண்டும் என்றும் இதன் தொடர்ச்சியாக , இதே இணையதளத்தில் Fit India சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்தல் மூலம் Fit India Flag 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்பொருள் சார்ந்து அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் தத்தம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களையும் அவரவர் பணிபுரியும் பள்ளிகள் www.fitindia.gov.in எனும் இணையதளத்தில் அப்பள்ளிகளின் தகவல்களை உள்ளீடு செய்து Registration பணியை உடனேமுடிக்குமாறும் Fit India Flag 3 Star Rating அல்லது 5 Star Rating போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக , அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களும் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் www.fitindia.gov.in எனும் இணையதளத்தில் பதிவு ( Registration ) செய்துள்ளதை உறுதி செய்திடவும் இப்பணியை முழுமையாக முடிக்கும் பொறுப்பும் அவர்களுக்கே உரியது என்பதை உணர்ந்து செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.