ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு - ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - Asiriyar.Net

Friday, December 25, 2020

ஓய்வூதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு - ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

 


ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு- ஓய்வூதிய நலத்துறை அமைச்சர் உத்தரவு!!!






கொரோனா காலத்தில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான ஆயுட்கால சான்றிதழ் சமர்பிக்கும் அவகாசத்தை பிப்ரவரி வரை நீடிப்பதாக ஓய்வூதிய நலத்துறை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.



கால அவகாசம் நீட்டிப்பு:

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வூதியம் பெற வருடந்தோறும் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்த வருடம் கொரோனா நோய் பரவல் காரணமாக வயது மூத்தவர்கள் ஓய்வூதியம் வாங்க வங்கிகளில் கூட்டமாக உள்ளனர். இதனால் கொரோனா நோய் பரவ வாய்ப்புள்ளதாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது ஆயுட்கால சான்றிதழை வழங்க கால அவகாசம் பிப்ரவரி முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஓய்வூதிய நலத்துறை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று உத்தரவிட்டார்.




இதுகுறித்து அவர் கூறுகையில்,”அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதியம் தரும் வங்கிகளில் அதிகம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது இதனால் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு தனி கவுண்ட்டர் ஒதுக்கப்பட்டு நவம்பர் முதல் அவர்கள் தங்கள் சான்றிதழை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வருடந்தோறும் ஓய்வூதியம் பெற ஆயுட்கால சான்றிதழ்கள் தேவைப்படுவதால் சான்றிதழ் வழங்கும் முறையை டிஜிட்டல் மயமாக்கி தபால் வங்கி கணக்கு வழியாக பெறும் வகையில் எளிமையாக்கியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற ஓய்வூதியதாரர்களுக்கு மிகவசதியாக இருக்கிறது. அடுத்தகட்டமாக முகத்தை காட்டியதும் அடையாளம் காணும் தொழில்நுட்பம் வழியாக ஆயுள் சான்றிதழ் வழங்கும் முறையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Post Top Ad