சீர்காழி அருகே அரசு பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் எதிர்ப்பால். பணியிட மாற்றம் செய்து முதன்மைகல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார். நாகை மாவட்டம் சர் காழி அருகே வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதாகரீக செயலில் ஈடு பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஆசிரிய தைரியநாதன் மீது பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மூவலூர் அரசு உயர்நி லைப் பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் 3 மாதங்கள் சம்பளம் வழங் கப்படவில்லை என கூறி வைத்தியநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி முன்பு தைரியநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்புதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், புகாருக்கு உள்ளான ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்த்தால் தங்கள் குழந்தைகளை பள்: ளிக்கு அனுப்பமாட்டோம். என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தைரியநாதனை தேவூர் அரசு மேல்நிலைப்பள் ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் இடமாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment