ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க! - Asiriyar.Net

Tuesday, December 15, 2020

ரூ.79 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

 






மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மொத்தம் 19 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.78 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்


மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 19



பணி : இயக்குநர்


கல்வித் தகுதி : பொறியியல், தொழில்நுட்பம் பிரிவில் இளநிலைப் பட்டம், பட்டயக் கணக்கு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதியம் : ரூ.78,800 மாதம்


அதிகாரப்பூர்வ அறிவிப்பு : விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் 15.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு முறை : தனிப்பட்ட நேர்காணலில் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான வெயிட்டேஜ் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1,500

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் kviconline.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Post Top Ad