இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது..வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு.! - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, January 28, 2020

இந்த இரண்டு நாட்கள் வங்கிகள் செயல்படாது..வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு.!வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், ஒரு வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும், அடிப்படையான ஊதியத்துடன் சிறப்பு சலுகைகளை இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும், ஓய்வூதிய பலன்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால், வங்கி ஊழியா்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா். அதன் பிறகும் இந்த கோரிக்கைகளுக்கு தீா்வு இல்லை என்றால் வரும் மாா்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம், இதையடுத்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமும் நடத்தப்படும்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய அளவில் 10 லட்சம் வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பாா்கள் என கூறப்படுகிறது. இதனால் பணம், காசோலை பரிவா்த்தனை உள்ளிட்ட வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
Recommend For You

Post Top Ad