PO 2 - இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் - Asiriyar.Net

Tuesday, April 14, 2026

PO 2 - இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள்

1. 17 A புத்தகத்தில் (Register of Voters):

a. PO1 வாசிக்கும் வாக்காளரின் வரிசை எண்-ஐ எழுத வேண்டும்.

b. EPIC-ன் முழு எண்களையும், மற்ற ஆவணங்களின் கடைசி 4 எண்களையும் எழுத வேண்டும்.

c. வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை வாங்க வேண்டும்.

2. Voter Slip-ல் :- வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயர் ஆகியவை எழுதி கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும்.

3. அழியாத மை வைக்க வேண்டிய இடம் :

a. இயல்பானவர் இடது கை ஆல் காட்டி விரல்

b. Proxy -இடது கை நடு விரல்

c. பார்வையற்றிவரின் உதவியாளர் வலது கை ஆள் காட்டி விரல்

4. அழியாத மை-ஐ நுனிநகம் முதல் விரல் மூட்டு வரை வைக்க வேண்டும்.

5. புத்தகத்தில் (17A) - வாக்கு பதிவு ஆரம்பம் / முடிவின் போது "வாக்குபதிவு ஆரம்பம் / முடிவு" மற்றும் "வாக்குபதிவு எண்ணிக்கை"-யை எழுதி PO, PO2 மற்றும் முகவர்கள் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும்.

6. ASD வாக்காளர் வந்தால் அவர்களிடம் கையொப்பம் மற்றும் கைரேகை இரண்டையும் வாங்க வேண்டும்.

7. EPIC வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மற்ற ஆவணங்கள் வாக்காளர் எண்ணிக்கை-யை கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும்.

8. 17A -ல் பூர்த்தி செய்யப்ட்ட பக்கத்திலும் PO கையொப்பமிட வேண்டும்.

9. 17A -ல் வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்யத பின்னர், அந்த வாக்காளர் கையொப்பம் அல்லது கைரேகை இட மறுத்தார் எனில், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது. 






No comments:

Post a Comment

Post Top Ad