அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் மூன்றாவது மொழி கற்க விருப்பமா! ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியீடு - Asiriyar.Net

Thursday, April 30, 2026

அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்கள் மூன்றாவது மொழி கற்க விருப்பமா! ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியீடு

Central institute of Indian languages என்ற மத்திய அரசு நிறுவனம் 

Diploma in Language Training 

என்ற படிப்பில் சேர்வதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


20 இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்து படிக்கலாம்.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களுடைய மாநில மொழி மற்றும் ஆங்கிலம் அல்லாத ஒரு பிற மாநில மொழியை மூன்றாவது மொழியாக கற்பதற்கு விண்ணப்பிக்கலாம். 

படிப்பில் சேர்ப்பவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கல்வித் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

கட்டாயமாக பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் படிக்க வேண்டும் இன்று சுற்றறிக்கையில் சொல்லப்படவில்லை.

இத்திட்டம் ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் இந்திய மொழிகளைக் கற்க விரும்பும் பொதுமக்களுக்கும் பயிற்சியை வழங்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்களிடையே பன்மொழித் திறனை வளர்ப்பதையும், அதன் மூலம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாக உள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான 10 மாத மொழிக் கல்வி பட்டயப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ இணைய ஒளி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.





No comments:

Post a Comment

Post Top Ad