தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கோரிக்கை - Asiriyar.Net

Monday, April 27, 2026

தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கோரிக்கை




'தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், நாமக்கல் மாவட்ட செயலாளர் சங்கர், தமிழக தலைமை தேர்தல் கமிஷனருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து, மனுவில் கூறியிருப்பதாவது: 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்றிய அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் ஓட்டுச்சாவடி பணிக்கான மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு நாளொன்றுக்கு, 500 ரூபாய் வீதம், இரண்டு நாட்களுக்கு, 1,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 3ம் கட்ட பயிற்சி வகுப்பு, கடந்த, 20ல் நடந்தது. அப்பயிற்சி வகுப்பிற்கு, 500- ரூபாய் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.


நாமக்கல் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி, ஏப்., 12ல் நடந்தது. அன்றைய பயிற்சி வகுப்பிற்கும், உரிய மதிப்பூதியம் வழங்க வேண்டும். தேர்தல் பணியை சிறப்பாக நடத்தி முடித்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு உரிய மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad