அகரம் பவுண்டேஷன் முக்கிய அறிவிப்பு ! - Asiriyar.Net

Wednesday, April 29, 2026

அகரம் பவுண்டேஷன் முக்கிய அறிவிப்பு !





‘அகரம் பவுண்டேஷன்’ அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) சென்னை தியாகராய நகரில் மட்டுமே தனது அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் எங்களுக்குக் கிளை அலுவலகங்கள் இல்லை என்பதைப் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.


'அகரம் விதை திட்டத்திற்கான மாணவர் தேர்வு, சமூகப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பணமாகவோ, பொருளாகவோ பெறப்படுவதில்லை.

சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனிநபர்களும், அமைப்புகளும் "அகரம்" என்ற பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதோடு, மாணவர்களையும் பெற்றோர்களையும் பொதுமக்களையும் ஏமாற்ற முயற்சிப்பது கவனத்திற்கு வந்துள்ளது.

எனவே, 'அகரம்' சார்பாக உங்களை அணுகுவதாகக் கூறும் நபர்கள் அல்லது அமைப்புகளிடம், எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களில் உறுதிப்படுத்தாமல் எக்காரணம் கொண்டும் பின்வருவனவற்றை வழங்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்:

* அசல் கல்விச் சான்றிதழ்கள்

* பணம்

* தனிப்பட்ட தகவல்கள்

மேலும் தகவல்களுக்கு கீழ்க்காணும் தொடர்பு விவரங்களை அணுகவும் :

முகவரி: அகரம் பவுண்டேஷன், 15, அருளாம்பாள் தெரு, தியாகராய நகர் - 600017

தொலைபேசி எண்கள்: 044 43506361 / 98418 91000

மின்னஞ்சல்: info@agaram.in

இணையதளம்: agaram.in”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Post Top Ad