10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு - Asiriyar.Net

Tuesday, April 7, 2026

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு பறந்த திடீர் உத்தரவு




தமிழ்நாடு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளன. ஏப்ரல் 20-க்குள் திருத்தும் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.


இந்த தேர்வுகளை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 8,82,806, தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு மையங்களில் தேர்வு எழுதப்பட்டது. இந்த தேர்வு பணிகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

10ம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்களும். ஆங்கிலம் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும், அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும், சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற விருப்பமொழி பாடத்தேர்வை 118 பேர் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் தேர்​வுத் துறை இயக்ககம் அனுப்​பி​யுள்ள சுற்றறிக்கையில்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்​தாள் மதிப்​பீட்​டுப் பணியை செய்து முடிக்​கத் தேவை​யான ஆசிரியர்​கள் எண்​ணிக்​கை​யை, பாடப் பிரிவு, பயிற்று மொழி வாரி​யாக சரி​யாக கணக்​கிட்டு உடனே அவர்​களை பணி​யில் இருந்து விடு​வித்து முகாம் பணிக்கு அனுப்ப வேண்​டும். தமிழ் வழி​யில் கற்​பிக்​கும் ஆசிரியர்​கள் தமிழ்​வழி விடைத்​தாள்​களை​யும், ஆங்​கில வழி​யில் கற்​பிக்​கும் ஆசிரியர்​கள் ஆங்​கில​வழி விடைத்​தாள்​களை​யும் மட்​டுமே மதிப்​பீடு செய்ய வேண்​டும்.

மதிப்​பீட்​டுப் பணி​களை தாமதமின்றி குறிப்​பிட்ட நாட்​களுக்​குள் முடிக்க வேண்​டும். இதற்​காக, தங்​களது நிர்​வாகத்​துக்கு உட்​பட்ட பள்​ளி​களில் இருந்து 10-ம் வகுப்பு பாடம் நடத்​தும் தகு​தி​யான பாட ஆசிரியர்​களை பணி​யில் இருந்து விடு​வித்​து, தேர்​வாளர்​களாக நியமனம் செய்து மதிப்​பீட்​டுப் பணியை மேற்​கொள்ள அறி​வுறுத்தி அனுப்பி வைக்க வேண்​டும். எந்த பள்​ளி​யில் இருந்​தும் ஆசிரியர்​கள் விடு​ப​டாத வகை​யில் கண்​காணிக்க வேண்​டும். மதிப்​பீட்​டுப் பணிக்கு அனுப்​பும் ஆசிரியர்​களுக்கு ஏப்​ரல் 9-ம் தேதிக்​குள் நியமன ஆணையை வழங்க வேண்​டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதன்மை தேர்வாளர் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள், ஏப்ரல் 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டும். அரசுத் தேர்வுத் துறை வழங்கியுள்ள விடைக்குறிப்பில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தெரிவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 13-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் உதவி தேர்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த பணிகளை 20-ம் தேதிக்குள் அதாவது 6 நாட்களில் நடத்தி முடிவுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் மே20ம் தேதி வெளியாகும் எனவும் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad