மூன்று மாதங்களாக ஆசிரியர்களின் ஊதியத்தைப் பெற்றுத் தராத கல்வி அதிகாரிகள் - Asiriyar.Net

Thursday, April 30, 2026

மூன்று மாதங்களாக ஆசிரியர்களின் ஊதியத்தைப் பெற்றுத் தராத கல்வி அதிகாரிகள்

கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டி போராட்டம் தொடங்கப்பட்டது. ஜனவரி 5 -ஆம் தேதி பள்ளி  வேலை நாளாகும் வெளிநாட்களிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு சார்பில் போராடிய வேலை  நாட்களுக்கான NO WORK NO PAY என்பதன் அடிப்படையில் ஊதியம் வழங்கவில்லை.

போராட்டம் முடிந்து  பிப்ரவரி மாதம் பணியில் சேர்ந்த பின்பு அனைத்து மாவட்டங்களில் மாதாந்திர ஊதியம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் சென்னை மாநகராட்சி ZONAL-5 ( ராயபுரம்) ல் மட்டும் ஐந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களாக இதுவரை ஊதியம் வழங்கவில்லை. 

இதுகுறித்து மார்ச் 23ஆம் தேதி சென்னை மாநகராட்சி உதவி கல்வி அலுவலர்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்பும் நடவடிக்கை எடுக்கப்படாததால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மாநகராட்சியின் கல்வி அலுவலர்  அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் இதுவரை ஐந்து ஆசிரியர்களின் வாழ்வாதாரமான மாதாந்திர ஊதியம் வழங்கப்படவில்லை. 

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியினை மேம்படுத்திடவும், ஆசிரியர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும் நியமிக்கப்பட்ட கல்வி அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அசட்டையாக தொடர்ந்து இருப்பது ஏற்படுவது அல்ல, தமிழக சட்டமன்ற தேர்தலில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஒரு சில நாட்கள் அமைதியாக காத்திருந்தோம்.

மேற்கண்ட புகார்கள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் இப்போது இணையதளம் வாயிலாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்திற்கு பின்பு மேற்கண்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையென்றால், வேறு வழியில்லாமல் மீண்டும் சென்னை மாநகராட்சியில் மாபெரும்  போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

போராட்டங்களை ஆசிரியர்கள் தவிர்க்க நினைத்தாலும் இதுபோன்று அசட்டையாக செயல்படும் அதிகாரிகளால் தமிழக அரசுக்கும் அவப்பெயர்கள் ஏற்பட்டு, போராட்டங்களும் தவிர்க்க முடியவில்லை. 

சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு,சுமூக முடிவு ஏற்படுத்த பணிவுடன் வேண்டுகிறோம்.

ஜே.ராபர்ட்

*SSTA-மாநில பொதுச்செயலாளர்*




No comments:

Post a Comment

Post Top Ad