தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை வரும் ஜூனில் நடத்தி முடிக்க வேண்டும் என சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தி யுள்ளன.
கல்வித்துறையில் ஆண் டுதோறும் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இது வழக்கமாக ஜூனில் நடத்த வேண்டும்.
ஆனால் சில ஆண்டுகளாக ஆகஸ்ட், செப்டம்பரில் நடக்கின் றன. இதனால் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கிறது. மேலும் கல்வியாண்டு இடையில் ஆசிரியர்கள் மாற வேண்டியுள்ளதால் மாறுதல் பெற்றுச்செல்லும் மாவட்டங்களில் அவர் களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மேற்கொள்ள சேர்க்கை முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே, பள்ளிகள் செயல்பட தொடங்கும் போது மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் மாணவர், ஆசிரியர் தரப்புக்கு பாதிப்பில்லாமல் இருக்கும். இம்முறை கலந்தாய்வை ஜூனிற்குள் நடத்த கல்வித்துறை திட்டமிட வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலை மையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது:
கலந்தாய்வு ஒருமாதம் வரை நடத்தப்படும். வழக்கமாக பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூனில் நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதிகாரிகள் கேட்பதில்லை. தற்போது சட்டசபை தேர்தல் நடந்துள்ளது.
யார் ஆட்சி அமைந்தாலும் ஜூனில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட வேண்டும்.
மேலும் தேர்ச்சி விபரம் தயாரித்தல், மாணவர் சேர்க்கை, சம்பளம் பெற்று வழங்குதல் உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக, பணி நீட்டிப்பில் பணி யாற்றும் தலைமையாசி ரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதி நாளான மே 31ல் ஓய்வுபெறும் வகையில் கல்வித்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.


No comments:
Post a Comment