2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - இருவர் தேர்வு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, March 11, 2024

2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - இருவர் தேர்வு!

 

மாணாக்கர்களின் அறிவை வடிவமைப்பதிலும் , அறிவியல் கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பதிலும் , உயர் கல்வியில் மாணாக்கர்கள் அறிவியல் துறையினை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் அறிவியலாளர்களாக உருவாகுவதற்கும் அறிவியல் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.


அறிவியல் ஆசிரியர்களின் விலைமதிப்பற்ற பணிகளை அங்கீகரிக்கும் விதமாக அறிவியல் நகரம் 2018-2019 முதல் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகளை வழங்கி வருகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 


2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு இரண்டு அறிவியல் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


2022-2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதை மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்எஸ்ராஜகண்ணப்பன் அவர்கள் , உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் திரு ஆகார்த்திக் இஆப , மற்றும் அறிவியல் நகரம் , முதன்மைச் செயலர் துணைத் தலைவர் திரு தேவ் ராஜ் தேவ் , இஆப ஆகியோர்களின் முன்னிலையில் இன்று ( 11.03.2024 ) சென்னை தலைமை செயலகத்தில் வழங்கினார்கள்.


 விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு 


1. இயற்பியல் துறையில் திருமதி சரபிந்துலேகா , முதுகலை ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி , கொட்டாரம்- 629703. கன்னியாகுமரி மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது . 
2. உயிரியல் துறையில் திருமதி சு.சங்கீதா , பட்டதாரி ஆசிரியை , அரசு மேல்நிலைப்பள்ளி சேடப்பட்டி -625 527 , மதுரை மாவட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் தலா ரூ .25,000 / - ( ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும் ) ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
Post Top Ad