சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒரு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிரிட்டோ 55, என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.
நேற்று காலை 6ம் வகுப்பு மாணவி ஒருவர் வகுப்பறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தபோது மாணவியை பிரிட்டோ ஆடையை கிழித்து பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி புகார் கூறியுள்ளார்.
தகவல் அறிந்த அவரது பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோர், கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். மேல் விசாரணைக்காக அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
பிரிட்டோ கூறுகையில், அந்த மாணவி எழுதிக் கொண்டிருந்தபோது கையில் ஒரு பேப்பரை வைத்திருந்தார், அதை கேட்ட போது கொடுக்கவில்லை. அதை வாங்கிய போது கை தவறி அவரது மேல் சட்டை கிழிந்தது. அவரை வீட்டிற்கு சென்று வேறு சட்டை மாற்றி வருமாறு கூறினேன் என்றார். இந்நிலையில் போலீசார் பிரிட்டோவை போக்சோவில் கைது செய்தனர்.
No comments:
Post a Comment