4 முதல் 9ஆம் வகுப்பு வரை அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் 23.04.2024 தேதிக்கு மாற்றம் - Director Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, March 29, 2024

4 முதல் 9ஆம் வகுப்பு வரை அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் 23.04.2024 தேதிக்கு மாற்றம் - Director Proceedings

 

பார்வை (1)ல் காணும் செயல்முறைகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.


ஈகை பெருநாளை முன்னிட்டு பள்ளித் தேர்வுகளில் தேதியை மாற்றி அமைக்க கோரி பார்வை (2) மற்றும் (3)ல் கண்டுள்ளபடி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.


அதனடிப்படையில், தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பார்வை (1)யில் காணும் செயல்முறைகளில் 10.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு 22.04.2024ஆம் தேதிக்கும் 12.04.2024 அன்று நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு 23.04.2024ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Post Top Ad