மாணவா் எண்ணிக்கை குறைவான பள்ளிகள் மூடப்படாது - பள்ளிக் கல்வித் துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 20, 2024

மாணவா் எண்ணிக்கை குறைவான பள்ளிகள் மூடப்படாது - பள்ளிக் கல்வித் துறை

 
பள்ளிகள் மூடப்படாது:


அதிகாரிகள் விளக்கம் இதற்கிடையே தமிழகம் முழுவதும் மாணவா் எண்ணிக்கை குறைவான நூற்றுக்கணக்கான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்படுவதாகவும்; அவற்றில் கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:


தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் கூடுதல் வகுப்பறைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எந்தவொரு பள்ளிகளும் மூடப்படாது.


மாறாக, கூடுதலாக பள்ளிகள் தொடங்கப்படும். கடந்த ஆண்டுகளில் குறைந்த மாணவா் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் கூட நிகழாண்டில் அதிகளவில் மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். எனவே, அரசுப் பள்ளிகள் குறித்து பரவும் எதிா்மறையான தகவல்களை பெற்றோா், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அவா்கள் தெரிவித்தனா்.


இதுதொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று வரை, 2.19 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும், 1.88 லட்சம் பேர் சேர்ந்துஉள்ளனர்.


இதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், 20,000 தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும், 8,000 அரசு நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்களும் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும், 80,000 ஆசிரியர்களுக்கு நவீன வழியில் பாடம் நடத்த, 'டேப்' என்ற கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.


மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.


இந்நிலையில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவான, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துஉள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன.


தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளை மூடும் திட்டம் ஏதும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad