திருவானைக்காவல் பாரதியார் நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாண வர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த நூதன முறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
திருவானைக்காவல் பாரதியார் நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒலிப்பெருக்கி வாயிலாக தமிழ், ஆங்கிலம் பாடங்களை படித்து நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். மற்றும் தமிழ் பாடங்களை படித்துக்காட்டி வித்தியாச மாட்டுவண்டியில் மேடை முறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கல்வி தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் வித் தியாசமான விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப் பினரையும் கவரும் வகை யில் இருந்தது.
இந்நிகழ்ச்சியில் முன்ன தாக பள்ளி தலைமையாசி ரியர் (பொ) ஜெயராமன் வரவேற்றார். பேரணியை காஞ்சிபுரம் மாவட்டம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் (ஓய்வு) சிவக்கு மார் தொடங்கி வைத்து கல்வி கற்பதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
மாணவிகள், பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்ப தன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் வகையில் பேரணி நடத்தினர். இதில் பள்ளி ளின் வசிப்பிடங்களுக்கே பட்ட சேரில் அமர்ந்தபடி இந்த பேரணியில் சென்றனர்.
No comments:
Post a Comment