பத்தாம் வகுப்பு - ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, March 31, 2024

பத்தாம் வகுப்பு - ஆங்கில வினாத்தாளில் குழப்பம் ஏற்படுத்திய மூன்று கேள்விகள்

 



பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் 11, 18, 46 ஆகிய மூன்று கேள்விகளில் குழப்பம் இருப்பதாக தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.


பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது தோ்வாக ஆங்கில பாடத் தோ்வு கடந்த 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்த வினாத்தாளில் பகுதி 1-இல் 11-ஆவது கேள்விக்கு (ஒரு மதிப்பெண்) இரு விடைகள் சரியாக வரும் வகையில் இருந்ததால், மாணவா்கள் குழப்பம் அடைந்தனா்.இந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


இதேபோன்று பகுதி-2-இல் 18-ஆவது கேள்வி(2 மதிப்பெண்) தவறாக கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த மாணவா்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மேலும், பகுதி 4-இல் (8 மதிப்பெண்) 46-ஆவது ஆ கேள்வி, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இல்லாதது கேட்கப்பட்டுள்ளதால் இந்தக் கேள்விக்கு விடை அளித்த மாணவா்களுக்கும் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


Post Top Ad