பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 - பொது நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - Asiriyar.Net

Friday, March 22, 2024

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 - பொது நடத்தை விதிமுறைகள் என்னென்ன?

 




இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய பொதுத்தேர்தல்கள் அறிக்கை செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடுகிறது.

இது பொதுத்தேர்தல் சுமூகமாகவும், ஆரோக்கியமாகவும் நடத்திட உதவுகிறது.

அனைத்து கட்சிகளையும் சமமாக பாவிக்கவும் நடைமுறையை உறுதி செய்கிறது.

வெளிப்படையான முறையில் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் இந்திய தேர்தல் முறைகளின் மீது வாக்காளர்களிடையே நம்பிக்கையை மேம்படுத்திட உதவுகிறது. அரசு அலுவல்கள் தவறாக பயன்படுத்தபடுவதை தடுக்கிறது. 


1. மத்திய, மாநில அரசுகளால் புதிய திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாது.


2. புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.


3. அனுமதி பெறாமல் கட்சி கொடி, பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்க முடியாது.


4. பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.


5. 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது.


6.அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது.


7. வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள் & தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது.


8. மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.


Click Here to Download - தேர்தல் நடத்தை விதிமுறைகள் - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad