3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு - Asiriyar.Net

Friday, March 22, 2024

3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு

 



பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.


பிரதமர் மோடி பங்கேற்ற சாலை பேரணியில் மாணவர்களைப் பங்கேற்க வைத்த  பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


பேரணியில் பள்ளி மாணவர்கள்


அப்போது ராமர், சீதை மற்றும் அனுமன் ஆகியோரின் வேடமிட்டு, குழந்தைகள் பலர் பேரணியில் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். அத்தோடு அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல பள்ளி சீருடை அணிந்தும் பல்வேறு குழந்தைகள் பேரணிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இது அங்கிருந்தோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.


தேர்தல் தொடர்பான பரப்புரை, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களைப் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. இதனை மீறிய பாஜகவிற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.  


இந்த நிலையில், சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பிரதமர் மோடி பங்கேற்ற சாலை பேரணியில் மாணவர்களைப் பங்கேற்க வைத்த  பள்ளி தலைமை ஆசிரியர், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad