1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது? - Asiriyar.Net

Tuesday, March 19, 2024

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது?

 




1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வு எப்போது ???

கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும்... ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பின் ஜூன் இரண்டாவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் ஜூன் 4-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.


ஓட்டுச் சாவடிகளில் விடிய விடிய ஓட்டுகள் என்னும் நிலை ஏற்படும் எனவே 2024 25-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரத்துக்கு அதாவது ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிப் போகும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல்  தேர்வுகள்  நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தேர்தலுக்கு முன்பே தேர்வுகளை முடித்துக் கொள்ள  பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.


ஆனால் பெற்றோர்கள் ஏப்ரல் 22 க்கு பிறகு நடைபெற்றால் கோடை வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள் இதை கருத்தில் கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை தேர்வு 19ஆம் தேதிக்கு முன்னரே முடிக்குமாறு பணிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வுகள் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





Post Top Ad