மக்களவைத் தேர்தல் தேதி நாளை (மார்ச். 16) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் தேர்தலை எத்தனை கட்டங்களாக நடத்துவது குறித்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் புதிய தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் நாளை வெளியாகவுள்ளன.
மேலும், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment