மாற்றுப்பணியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் கல்வியாண்டு முதல், நியமன இடத்திலேயே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது, குறிப்பிட்ட பள்ளிகள் ஒதுக்கப்படும். பின், தேவைப்படும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு பெறுவர்.
இவ்வாறு இடமாறுதல் உத்தரவு வாங்காமல், தங்களுக்கு தேவையான பள்ளிகள் அல்லது பள்ளிக்கல்வியின் பல்வேறு பிரிவுகளில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாற்று பணியில் உள்ளனர்.
இந்நிலையில், இடமாறுதல் பெறாமல் மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்கள், வரும் கல்வியாண்டு முதல், தங்களுக்கான நியமன இடங்களில் பணியில் சேர வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்திஉள்ளது.
No comments:
Post a Comment