ஆசிரியரல்லாத பணியாளர்களில் கலையாசிரியர் பதவிக்கு பணி மாறுதல் பெற 01.01.2022 அன்றுள்ளபடி முழு தகுதி பெற்றவர்களது விவரங்களில் உரிய படிவத்தில் இவ்வாணையரகத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டதில் கீழ்க்கண்ட முதன்மைக் -கல்வி அலுவலர்களிடமிருந்து இந்நாள் வரை எவ்வித விவரமும் பெறப்படவில்லை , எனவே , இச்செயல்முறைகளைப் பெற்ற இரு தினங்களில் பணி மாறுதலுக்கு உரிய தகுதி பெற்றவர்களின் கருத்துருக்களை உடன் இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைத்திட சென்னை , அரியலூர் . தென்காசி . திருநெல்வேலி , தேனி , தஞ்சாவூர் , சிவகங்கை , இராணிப்பேட்டை , புதுக்கோட்டை மற்றும் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment