தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய திட்டங்கள் மற்றும் பொது தேர்வு பணிகள் குறித்து, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில், நாளை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின், அடுத்த கல்வி ஆண்டுக்கான திட்டங்கள், வளர்ச்சி பணிகள், மார்ச்சில் நடத்தப்பட உள்ள பொது தேர்வு ஆகியவை குறித்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்க உள்ளார்.
இந்த கூட்டத்தில், பள்ளிக்கல்வி முதன்மை கல்வி அலுவலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராம வர்மா மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.-
No comments:
Post a Comment