அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்கள் கை கோர்க்கணும் - முதல்வர் ஸ்டாலின் - Asiriyar.Net

Monday, December 19, 2022

அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்கள் கை கோர்க்கணும் - முதல்வர் ஸ்டாலின்

 அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கை கோர்க்க வேண்டும் என 'நம்ம ஸ்கூல்' திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


'நம்ம ஸ்கூல்' திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் பேசியவதாவது: பள்ளி காலங்களை மறக்க முடியாது. குழந்தை பருவத்தை என்றும் மறக்க மாட்டோம். அதேபோல் குழந்தை பருவத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களின் முகம் என்றும் மறக்காது.


அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கை கோர்க்க வேண்டும். தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2வது இடம். தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் முதலிடத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த மக்களும் அரசுடன் கை கோர்க்க வேண்டும்.


தமிழக பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு எந்த தடையும் இன்றி கல்வி கிடைக்க வேண்டும். 'நம்பர் 1 தமிழ்நாடு' என்ற கனவு நிறைவேறி உள்ளது. அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் முன்னோடி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Post Top Ad