தமிழக அமைச்சர்களின் புதிய இலாகாக்கள் - உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை என அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, December 14, 2022

தமிழக அமைச்சர்களின் புதிய இலாகாக்கள் - உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை என அறிவிப்பு

 





தமிழக அமைச்சர்களின் இலக்குகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். 

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 11 தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு;

* அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு

* வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு

* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் துறைகள் ஒதுக்கீடு

* கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்

* சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
* விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்

* அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு

அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு

அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment

Post Top Ad