பள்ளிக் கல்வித் துறை திட்டங்கள்: டிச.12, 13-இல் அமைச்சா் ஆய்வு - Asiriyar.Net

Friday, December 9, 2022

பள்ளிக் கல்வித் துறை திட்டங்கள்: டிச.12, 13-இல் அமைச்சா் ஆய்வு

 அரையாண்டுத் தோ்வு, கலைத் திருவிழா உள்பட பள்ளிக் கல்வித் துறை தொடா்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டிச.12, 13-ஆம் தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளாா்.


பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக நடத்தப்படும் மாதாந்திர அலுவல் ஆய்வுக் கூட்டம் கோட்டூா்புரத்தில் டிச.9, 10-ஆம் தேதிகளில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையை முன்னிட்டு இக்கூட்டம் டிச.12, 13-ஆம் தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா், துறைசாா் இயக்குநா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கலந்து கொள்கின்றனா்.


Post Top Ad