சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இதில் பயனடைவர். ஆண்டுக்கு ரூ.4.6 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment