ஆசிரியர்களிடம் வசூல் - லஞ்ச ஒழிப்பு துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் - Asiriyar.Net

Tuesday, December 20, 2022

ஆசிரியர்களிடம் வசூல் - லஞ்ச ஒழிப்பு துறை பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்

 

ஆசிரியர்களிடம் பணம் வசூலித்தது குறித்து விசாரிக்க, பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பிஉள்ளது.


தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள கடிதம்:


கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் எஸ்.ஏ.ராஜ்குமார் புகார் அனுப்பியுள்ளார். அதில், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைக்காக மாநாடு நடத்த போவதாகவும், அமைச்சர்கள் மகேஷ், உதயநிதி பங்கேற்க உள்ளதாகவும் கூறி, பகுதிநேர ஆசிரியர்களிடம் பணம் வசூலித்துள்ளதாக கூறியுள்ளார்.


இந்த புகார் பொதுவான ஒன்றாக உள்ளதால், அதன் உண்மைத் தன்மை மற்றும் புகாருடன் அளித்துள்ள ஆவணங்களின் உண்மைத் தன்மையை, சம்பந்தப்பட்ட துறை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.


எனவே, இது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post Top Ad