2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-ல் 15,146 பணியிடங்களை நிரப்ப முடிவ செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வு 2024 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது
No comments:
Post a Comment