தமிழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பி.எட். படித்ததுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் முடித்து பி.எட் படித்தவர்களை கணக்கிற் கொள்ளாமல் பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பி.எட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாகக் கூறி ஏ.ராக சைனி பிரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பிஎட் படிப்பை முடித்து, ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை 4 வாரங்களில் ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment