நாளை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, December 16, 2022

நாளை (17.12.2022) பள்ளிகள் வேலைநாளாக செயல்படும் மாவட்டங்கள் - CEOகள் அறிவிப்பு

 சென்னை மற்றும்  திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 17) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9-ல் விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலைநாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை காரணமாக டிசம்பர் 2-ல் விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை (டிசம்பர் 17) அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அனைத்து வகையான மெட்ரிக் பள்ளிகளும் செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Post Top Ad