4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (12.12.2022) அரைநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..! - Asiriyar.Net

Monday, December 12, 2022

4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (12.12.2022) அரைநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..!

 மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னரும் கூட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.


இந்நிலையில், மழையின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக அரை நாள் விடுமுறை அறிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதை உறுதிபடுத்த வேண்டும் என்று பள்ளி முதல்வர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

 

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டங்களிலுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அரை நாள் விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் இன்று (டிச.12) அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  


அதேபோல, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அரை நாள் விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாலைநேரத்தில் கூடுதலாக மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.


Post Top Ad