கீழ்பென்னாத்துார் அருகே, அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு சொந்த செலவில், 6.40 லட்சம் ரூபாய் செலவழித்து, 10 கழிவறையை ஆசிரியை கட்டிக் கொடுத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த ஐங்குணம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 180 மாணவர்கள், 276 மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கழிவறைகள் போதுமானதாக இல்லை.
இதையடுத்து அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியையான ஆனி ரீட்டா, 50, என்பவர், பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு, தனது சொந்த செலவில், 6.40 லட்சம் ரூபாயில், 10 கழிவறையை கட்டி கொடுத்தார்.
இதையறிந்த பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் சக ஆசிரியர்கள் அந்த ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment