மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க் - Asiriyar.Net

Thursday, December 8, 2022

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க புதிய லிங்க்

 தமிழக மின்சாரத்துறை மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை மும்முரமாக செய்து வருகிறது. ஏற்கனவே ஆன்லைன் மூலமாக இதற்கான இணைப்பு லிங்க் மின் துறையால் வெளியிடப்பட்டது. மேலும், கடந்த 28ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 2811 மின்வாரிய கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் திறக்கப்பட்டன. இதில் காலை 10.30 மணி முதல் 5.15 மணி வரை பண்டிகை நாட்களை தவிர்த்து தினசரி ஆதார் இணைப்பிற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றனர். அந்த வகையில் நேற்று வரை 67 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.


தற்போது மீண்டும் மின் இணைப்பு  எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இணையப்பக்கம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் எளிமையாக ஆதாரை இணைக்கும் பக்கத்திற்கு செல்ல நேரடி லிங்க்கை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, Bit.ly/linkyouraadhar என்ற இணையதளத்தில் ஆதாரை இணைக்க மின்சாரத்துறையால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.


Post Top Ad