அடுத்தாண்டு ஆசிரியர் கவுன்சிலிங் - கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை - Asiriyar.Net

Monday, December 5, 2022

அடுத்தாண்டு ஆசிரியர் கவுன்சிலிங் - கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை

  'கல்வியாண்டு நிறைவு பெற 4 மாதங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் கவுன்சிலிங் நடத்துவதால் அரசு தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், அதை மே 2023ல் நடத்த வேண்டும்,' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக்ரெய்மாண்ட், கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: பள்ளி கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங் டிச.,9ல் நடக்கிறது. கல்வியாண்டு நிறைவு பெற 4 மாதங்கள் உள்ள நிலையில் பணிநிரவல் செய்வதால் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். பொது தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் கல்வி பாதிப்படையும்.


இதனை கருத்தில் கொண்டு மே 2023ல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். ஏற்கனவே கூறியபடி 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் ஏழு பணியிடங்கள் வழங்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது, முதுகலை ஆசிரியர்களுக்கு போதுமான பாடவேளை இல்லாததால் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு பணியிறக்கம் செய்யப்படுகிறார்கள்.


இதனால் அந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உபரியாக வேறு பள்ளிகளுக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இந்த கல்வியாண்டில் வழங்கவில்லை. அது வழங்கினால் 900 பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதனால் உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Post Top Ad