புதிய தனியுரிமை கொள்கைகளின் விளைவாக ஏற்பட்ட வாட்ஸ்அப்பின் சமீபத்திய பின்னடைவின் பலன்களைப் டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப் அனுபவித்து வருகின்றன.
இந்த ஆப்கள் கடந்த இரண்டு வாரங்களில் பல லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளன, மேலும் இந்த இரண்டு ஆப்களின் வளர்ச்சி எந்த நேரத்திலும் நிறுத்தப்படுவதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், இன்னும் அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், இந்த ஆப்கள் பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பிறகு இணையான புதிய அம்சங்களைக் கொண்டுவருவதில் தீயாக பணியாற்றி வருகின்றன.
உதாரணமாக, புதிய பயனர்களுக்கு (அதாவது பழைய வாட்ஸ்அப் பயனர்களுக்கு) மிகவும் பழக்கமான அனுபவத்தை வழங்க சிக்னல் ஆப் கஸ்டம் வால்பேப்பர் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர் ஆதரவை ஆப்பில் சேர்த்தது.
இப்போது, டெலிகிராம் ஆப் அதன் வெர்ஷன் 7.4இல் ஒரு புதிய டூல்-ஐ சேர்க்கிறது, இது பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை டெலிகிராம் ஆப்பிற்கு எளிதாக நகர்த்த உதவுகிறது.
Macerkopf-இன் சமீபத்திய அறிக்கையின்படி, டெலிகிராம் v7.4 இப்போது iOS பயனர்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக வெளிவருகிறது. இந்த அப்டேட் ஒரு புதிய இம்போர்ட் அம்சத்தைக் கொண்டுவருகிறது, இது பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை – வாட்ஸ்அப், லைன் மற்றும் KakaoTalk உள்ளிட்ட பிற பயன்பாடுகளிலிருந்து – டெலிகிராமிற்கு மாற்ற உதவும்.
இப்போது குறிப்பிட்ட ZIP File-ஐ டெலிகிராமில் iOS Share Sheet வழியாக இம்போர்ட் செய்ய முடியும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அந்த சாட்-ஐ நீங்கள் எந்த காண்டாக்ட் அல்லது க்ரூப் உடன் இணைக்க விரும்புகிறீர்கள் என்று டெலிகிராம் உங்களிடம் கேட்கும் என்பதையும் நினைவில் கொள்க.
அதன் பின்னரே குறிப்பிட்ட மெசேஜ்கள் உங்களுக்கும் உங்கள் காண்டாக்ட்டிற்கும் Sync செய்யப்படும். மேலும் எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட அனைத்து செய்திகளும் வேறு சேவையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்க லேபிள் செய்யப்படும்.
டெலிகிராம் புதிய Migration Tool-ஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், சில பயனர்கள் ஆப்பின் சமீபத்திய பதிப்பில் இதை அணுக முடிகிறது.
No comments:
Post a Comment