முகப்பரு தழும்புகளை போக்கும் எளிய வீட்டு வைத்தியம் - Asiriyar.Net

Monday, February 8, 2021

முகப்பரு தழும்புகளை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்

 






முகப்பருக்கள் வந்தாலே முகத்தின் அழகு பொலிவிழந்து போய்விடும். சிலருக்கு பருக்கள் இருந்த இடங்களில் தழும்புகள், புள்ளிகள் மறையாமல் இருக்கும். சில சமயங்களில் வலி, வேதனைகளை ஏற்படுத்தும். முக அழகை கெடுக்கும் முகப்பரு தழும்புகளை எளிய வீட்டு வைத்தியங்கள் கொண்டே போக்கிவிடலாம்.


* எலுமிச்சை சாறை பஞ்சுவில் ஒற்றி தழும்பு இருக்கும் இடத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். மேலும் எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால், பாதாம் எண்ணெய், தேன் கலந்து குழைத்து முகப்பரு தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி வந்தால் ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை காணலாம்.



* வெந்தயத்தையும் முகப்பரு தழும்பை போக்க உபயோகிக்கலாம். சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்த நீரை பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்துவிடும்.


* சந்தனமும் தழும்புகளை போக்கும் தன்மை கொண்டது. சந்தனக்கட்டையை இரவில் நீரில் ஊறவைத்துவிட்டு காலையில் நன்றாக உரசி, பஞ்சுவில் முக்கி தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தினமும் இருமுறை செய்து வந்தால் ஒருவாரத்தில் தழும்புகள் மறைய தொடங்கிவிடும்.



* சந்தன கட்டையில் ரோஸ் வாட்டர் ஊற்றி தேய்த்து அந்த விழுதை இரவில் தூங்க செல்லும் முன்பு தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்துவந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.


* ஆப்பிள் சிடேர் வினிகரையும் உபயோகிக்கலாம். சிறிதளவு ஆப்பிள் சிடேர் வினிகருடன் அதே அளவு நீர் கலந்து பஞ்சுவில் முக்கி தழும்புகளில் தடவி வரலாம்.


* கற்றாழை ஜெல்லையும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வந்தால் தழும்புகள் விரைவாகவே மறைந்துவிடும்.

Post Top Ad