ஆசிரியர்களுக்கு, உயர்கல்விக்கான அனுமதியை வழங்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேரும் போது பெற்ற கல்வி தகுதியை அதிகரிக்கும் வகையில், மேற்படிப்பு படிக்கலாம். இதற்கு தங்களின் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.அனுமதி பெறாமல் படித்த ஆசிரியர்களின் கல்வி தகுதியை, அவர்களின் பணி பதிவேட்டில் சேர்க்கவோ, பதவி உயர்வு மற்றும் உயர்கல்விக்கான சம்பள உயர்வுக்கு வழங்கவோ அனுமதி இல்லை.
இந்நிலையில், 2010 முதல் உயர்கல்வி படிப்புக்கான அனுமதி கேட்டு, நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளி கல்வித்துறையில் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன. இதை தொடர்ந்து, உயர்கல்விக்கான அனுமதிக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உரிய பதிலளிக்கப்பட்டு வருகிறது.
உயர்கல்விக்கான அனுமதி விண்ணப்பங்கள் மீது உரிய முடிவு எடுத்து, கோப்புகள் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன்படி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், 57 பேர், பகுதி நேர மற்றும் மாலை நேர உயர்கல்வி முடித்ததற்கு அனுமதி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment