பிரதமர் மோடி உத்தரவு எதிரொலி : விழுப்புரம் பள்ளிக்கு செல்லும் அமைச்சர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, February 2, 2021

பிரதமர் மோடி உத்தரவு எதிரொலி : விழுப்புரம் பள்ளிக்கு செல்லும் அமைச்சர்

 






பிரதமர் மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அடுத்சி சில வாரத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விழுப்புரத்தில் உள்ள, தான் பயின்ற பள்ளிக்கு நேரில் செல்ல உள்ளார்.



மத்திய பட்ஜெட் குறித்து விளக்கிக் கூறுவதற்காக, 15 மாநிலங்களில் நடக்கவுள்ள கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களில், நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே, வரும், 13ல், விழுப்புரம் மாவட்டத்தில், பா.ஜ., மகளிர் அணி நடத்தும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன், தமிழகம் செல்கிறார். இவர் பயின்ற, 'சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்' என்ற பள்ளி, விழுப்புரத்தில் தான் உள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை, அந்த பள்ளியில் தான் இவர் படித்தார்.





விழுப்புரத்திற்குச் செல்லும்போது, அந்த பள்ளிக்கும் செல்ல, நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். அதை ஏற்று, 25 ஆண்டுகளுக்குப் பின், தான் பயின்ற பள்ளிக்கு, நிர்மலா செல்ல உள்ளார்.




இதுகுறித்து நம் நிருபரிடம் பேசிய நிர்மலா சீதாராமன், தன் சிறு வயது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:என் தந்தை, ரயில்வேயில் பணிபுரிந்தவர். சிறு வயதில், நான் ஒரு வைரசால் பாதிக்கப்பட்டேன். டாக்டர்கள், என்னை காப்பாற்ற முடியாது என கைவிரித்துவிட்டனர்.





இதனால், என் தாத்தா, பாட்டியும், நான் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையை இழந்து விட்டனர். எனினும், பூரண குணமடைந்தேன். அப்போது, ரயில்வே மருத்துவமனையின், 'வராண்டா'வில், என்னை வைத்திருந்தனர். பருவ மழை பெய்தபோது, ஒட்டுமொத்த மாவட்டமும், பெரும் சேதத்தை சந்தித்தது. ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தன. அந்த நிகழ்வுகள் எல்லாம், இன்றும் நினைவில் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Post Top Ad