குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Sunday, February 14, 2021

குறித்த காலத்தில் வழங்காததால் பணிக்கொடைக்கு ஆண்டுக்கு 6% வட்டி வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 






தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் மண்டலத்தில் டிரைவர், கண்டக்டர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமமூர்த்தி உள்பட 11 பேர், தங்களுக்கு சட்டப்படி இரண்டு மாதங்களுக்குள் பணிக்கொடை விடுப்பு ஊதியம் உள்ளிட்ட ஓய்வு கால பணப்பலன்கள் வழங்காததால், அதற்கு ஆண்டுக்கு 10 சதவீத வட்டி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.



 


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் அளித்த உத்தரவு வருமாறு: தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வுகால பணப்பலன்களுக்கு 6 சதவீத வட்டியை, ஆறு தவணைகளாக வழங்கும்படி ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கிலும், ஓய்வுபெற்ற டிரைவர், கண்டக்டர்களுக்கு 6 சதவீத வட்டியை அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். இந்த தொகையை, மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஆறு மாத தவணைகளாக வழங்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் வட்டி தொகையை வழங்காவிட்டால், 10 சதவீத வட்டியை வழங்க வேண்டும். அந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad