பிப்ரவரி 15-ஆம் தேதி நள்ளிரவு முதல், ஃபாஸ்ட் டேக் இல்லையென்றால் இரட்டிப்புக் கட்டணம்:
நாளை (15.02.21) நள்ளிரவு முதல், ஃபாஸ்ட் டேக் இல்லாமல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும் எந்தவொரு வாகனமும் இரட்டிப்பாகக் கட்டணம் செலுத்த நேரிடும் என சாலை
போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது, ஃபாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.